(thanks -- picture courtesy ishafoundation.org)
Some intuition made me write this during Silence (Mounam) at the "Temple of Consciousness" established by my Guruji Vethathiri Maharishi at Aliyar in India . If any doubts clarifications or explanations needed please contact me at raviyolimathi@gmail.com. Though there is no relationship between the 18 Sithar photos and this article, to my astonishment, when i placed the pictures in it's own original order, it gave some meaning as they explain the respective paragraphs. We may call our Guruji as 19 th Sither!
காயச்சித்து
(copy right © 2008 by raviyolimathi)
(In Cell phone view - the lines shows unaligned)
(copy right © 2008 by raviyolimathi)
(In Cell phone view - the lines shows unaligned)
தவத்தில் சக்கரங்களில்
உயிரின் இருப்பே
இனிமை தந்திடும்!
விந்துநாத இல்லமே
உயிரின் மையமும்!

ஈருடல் மறைபுணர்வு
கர்மாக்கள் புத்துயிராகி
ஜணிக்கும் இறைநிகழ்வு!

புணர்ச்சி களிப்பில்
விந்துநாத கழிப்பில்
உயிர்த்துளி கலப்பால்
இனிமை உணர்த்திடும்!
ஆணுக்கு சுக்கிலமும்
பெண்ணுக்கு சுரோணிதமும்
மிகுதி கழிப்பின்
இன்பம் தந்திடும்!
மிகுதி களிப்பின்
துன்பம் நேர்ந்திடும்!
பெண்ணுக்கு ஆணும்
இன்பக் கடத்திகள்
அல்ல! அல்ல!
சதைகளின் உரசலினால்
உன்னுயிரின் செலவே
இன்பமாய் தோன்றும்!
சொப்பன ஸ்கலிதம்
சுயஇன்பப் பழக்கம்
ஓரினச் சேர்க்கை
தவறான பதிவுகள்
இவ்வுண்மை விளம்பும்!
இன்ப ஊற்றென்றால்
கண்களைக் கட்டி
கைப்பிடித்துப் பார்த்தால்
தமக்கை தந்நங்கை
வேற்றுமை தெரியுமே!
எண்ணமே இங்கு
இன்பத்துக்கு பதிவாச்சு!
தோல்தொடு ஸ்பரிசத்தில்
சீவகாந்த செலவாச்சு!

ஜென்ம ஜென்மமாக
எண்ணிய அனுபவங்கள்
கருச்செல்களில் பதிந்திட
உன்னுயிரின் இன்பம்
மாற்றுப்பாலே தருவதாக
மனம் மருவிற்று!
உடல் நலமில்லா போதிலும்
உடல் நலமில்லா போதிலும்
மனம் நலமில்லா போதிலும்
ஜீவா காந்த உயிர் சக்தி குறை போதிலும்
மாற்றுப்பால் உருவம்
உன் சஞ்ஜித பதிவால்
பேரழகாய் தோன்றினாலும்
இன்பம் பெறுவதோ
இன்பம் துய்ப்பதோ
கழிவின்ப கணங்களில்
காதலியுரு மனம்நினைக்க
அதுவேயுடலில் பதிவுகளாச்சு!
உயிருணர்வில் இருந்திட
மாற்றுடலின் கொடையென
உடற்செல்கள் மயங்கிட
காதலின் தோல்வியில்
மனமுடல் முடங்கிடும்!
இவ்வுண்மை உணராவிடின்
உயிருணர வழியில்லையென
கானல்நீரை நீரெனநம்பி
தற்கொலைக்கும் துணிந்திட்ட
காதலர்களும் உலகிலுண்டு!
பிள்ளைகளின் இயற்கையான
துன்பமிது பெற்றோரே
கனிவுடனே அணுகிடுவீர்!

கழிவின்ப கணங்களில்
உன்னுயிரின்ப உணர்வேயது
எனுமுண்மை நீயுணர்ந்தால்
காதல், காமம்
முற்றிலும் சாகுமங்கே!
காயமும் கல்பமாகும்!

உடற்கழிவு வெளியேற
வேற்றுடல் நாடாமை
துறவறம் ஆயிற்று!

மிகுதியான் கழிக்க
மாற்றுப்பால் உறவு
இல்லறம் ஆயிற்று!

ஏதறமாயின் காமப்பித்து
அழிக்குமிக் காயச்சித்து
காதலறம் ஆயிற்று!

உயிரின் இழப்பை
எள்ளளவு கணமே
உடலுறவில் உணர்வது
சிற்றின்பம் ஆயிற்று!
உயிரின் இருப்பை
எவ்வளவு கணமாயின்
தவத்தில் உணர்வது
பேரின்பம் ஆயிற்று!
இதற்கே அக்கால
முனிகள் ரிஷிகள்
நீண்ட நெடுங்காலம்
வனத்தவம் உறைந்தனர்!
இல்லம், துறவு
எந்த அறமாயினும்
தடையில்லை என்பதனை
நம்மாசான் உணர்த்திட,
மெஞ்ஞானம் பெறுவதற்கு,
பேரின்பம் உணர்வதற்கு,
வீடுபேறு அடைவதற்கு,
வீடும் உகந்ததே!
கீழ்முக வெளியேற்றம்
சிற்றின்பச் செலவு!
மேனோக்கு உள்ளேற்றம்
பேரின்ப வரவு!
சுழுமுனை வழி
சக்கரங்கள் கடந்து
பிரம்மரந்திரம் அடைந்தால்
பிரம்மஞானம் சித்தியாம்!
அமுதும் ஊற்றெடுக்கும்!
அகம்முகம் குழந்தையாம்!
மனவழியாம் தவங்கள்
உடல்வழியாம் காயகல்பம்
நம்மாசான் வேதாத்திரி
எளியமுறைகள் தந்துள்ளார்!
பதினெட்டு ஆண்டுகள்
இல்லறத் தவானுபவத்தில்
கண்டுணர்ந்த உண்மையிது!
ஆழியாரில் மௌனத்தில்
அறிவுத்திரு கோவிலினில்
திருவடிகளில் மண்டியிட்டு
இக்கவியை சமர்பிக்கிறேன்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
--ரவிஒளிமதி...